நவம்பர், டிசம்பர் பல்கலைக் கழகத் தேர்வு மாதங்கள். அம்மாதங்களில் நாமளும் ஒரு டிகிரி காப்பி மாதிரி டிகிரி வாங்கிடனும்னு என்ற நினைப்போடு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு
பஞ்சமிருக்காது. அதற்காகத் தேர்வறையில் அவர்கள் செய்யும் திகிடுதத்தங்கள், அதன் பொருட்டு எடுக்கும் முயற்சிகள், அதில் சிக்கல்கள் வரும் போது அதை எதிர் கொள்ளும் வினோதங்களுக்கு
குறைவிருக்காது. அப்படிச் சென்ற முறை நான் தேர்வெழுதச் சென்ற போது நிகழ்ந்தவைகளில் சில சுவராசியமான விசயங்கள் -
புக்லெட்டுல பக்கம் போட மறந்துடாதீங்க.
உங்க கையெழுத்தைப் போட மறந்துடாதீங்க.
சூப்பர்வைசர் கையெழுத்து இருக்கான்னு செக் பண்ணிக்கங்க.
அட்டன்டென்ஸ் கையெழுத்து ரெம்ப முக்கியம். இப்படி தேர்வறையில் ஒவ்வொரு நாளும் காதில் விழும் வழக்கமான கவன ஈர்ப்பை மேற்பார்வையாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் அறைக்குள் நுழைந்த புதிய மேற்பார்வையாளர் ஒருவர் இன்னொரு முக்கியமான விசயம் என்றார்.
அனைவரும் அவரை ஏறிட்டுப் பார்க்க "பேப்பரைத் தரும் போது நல்லா உதறி கொடுத்துட்டு போங்க. "பிட்" ட (துண்டுச் சீட்டு) வச்சு எழுதிட்டு அதை உள்ளேயே வச்சுக் கொடுத்துட்டுப் போறது நல்லாவா இருக்கு" என்றார்.