Tuesday 1 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 1

ட்ராயிங் வரஞ்சு அனுப்புனோமே என்னாச்சு

உடனே எல்லாம் சொல்ல முடியாது. பத்திரிக்கைக்கு அனுப்பி இருக்கிறேன், தேர்வாகி வெளியானதும் தகவல் தருவாங்க, அப்புறமா சொல்கிறேன்.

சரி….நீங்க அனுப்பி இருந்த கட்டுரை .கே. அதை மம்மி கிட்டக் கொடுத்து மினிமைஸ் பண்ணியாச்சு. ஆனால் வேர்ட்ஸ் (WORD’S) தான் கொஞ்சம் டஃபா (DUFF) இருக்கு மிஸ் கிட்டக் காட்டி கொஞ்சம் சரி செஞ்சுக்கிறேன்.

 

ஒரு ஒன்றரைப் பக்கக் கட்டுரைக்கு அம்மா, அப்பா, மிஸ் இன்னும் யாரெல்லாம் தேவையா இருக்கோ தெரியல? இந்த மாதிரியான ஞானமெல்லாம் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராமல் போச்சேன்னு தான் நினைக்கத் தோணுது

வளர்ந்தவர்களைப் போல எதன் பொருட்டும் மெனக்கெடலின்றி எதையும் செய்வதில் குழந்தைகள் விருப்பம் கொள்வதில்லை. எதையும் தெளிவாய் செய்வதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை அவர்களுக்கு மட்டுமே உரியதாய் இருக்கிறது.