Monday 16 February 2015

ரசிக்க – சிந்திக்க - 4

அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பிரச்சனை. அங்கிருந்த வரலாற்றுத் துறைக் கட்டிடம் அமைந்திருந்த புல் தரையின் மீது  அங்கு படிக்கும் மாணவர்கள்  கேண்டீனுக்குச் செல்லும் போதெல்லாம் கண்டபடி நடந்து சென்றார்கள். அதனால் புற்கள் அழிந்து திட்டுத் திட்டாகி புல்தரையே அலங்கோலமாக மாறிக் கொண்டிருந்தது. புல்தரை மீது நடக்காமல் கேண்டீனுக்குச் செல்ல வேண்டுமானால் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் புல்லின் மீது நடந்து செல்லக் கூடாது என பேராசிரியர்கள் கூறியதை மாணவர்கள் கேட்கவில்லை

தாங்கள் எவ்வளவு சொல்லியும் மாணவர்கள் கேட்காததால் பேராசிரியர்கள் தங்களின் தலைமைப் பேராசிரியரிடம் புகார் செய்தார்கள். புகாரைக் கேட்ட அந்தத் தலைமைப் பேராசிரியர் அப்படியானால்வரலாற்றுத்துறைக் கட்டிடத்தில் இருந்து கேண்டீனுக்குச் செல்ல புல்தரையின் மீது ஒரு சிமெண்ட் பாதையை நாமே அமைத்து விடுவோம். மாணவர்கள் கண்ட படி நடந்து செல்லாமல் அதன் மீது மட்டும் நடந்து கேண்டீனுக்குப் போய் வரட்டும்என்றார்அந்தத் தலைமைப் பேராசிரியர் சொன்ன ஐடியாவில் உருவானது தான் இன்று பெரிய புல் தரைகளின் மீது உள்ள புற்களை மிதிக்காமல் நாம் நடந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பாதைகள்! இந்த ஐடியாவைச் சொன்ன தலைமைப் பேராசிரியர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐசன் ஹோவர்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும். அந்தத் தீர்வை கண்டு பிடிப்பதில் தான் உங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. எனவே எப்பொழுதும் பிரச்சனைகளுக்கான தீர்வைக் கண்டுபிடிப்பவராக இருந்தால் நீங்களும் வெற்றி பெறலாம். சாதிக்கலாம்.

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்