Monday 15 December 2014

கைவசமிருக்கும் பெருமை

தாராளமயமாக்களின் தடத்தில்

கலாச்சாரத்தைக் கலைத்து

உலகமயமாக்களின் நிழலில்

பண்பாடுகளைச் சிதைத்து

பொருளாதாரத்திற்கு ஆகாதென

தாய்மொழியைத் தள்ளி வைத்து

நாகரீகத்தின் நளினத்தில்

இனத்தின் குணங்களை ஊனமாக்கி

அறம் தொலைத்த அரசியலுக்காக

அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி

பழம்பஞ்சாங்கக் குறியிட்டு

மூத்தகுடிகளின் அனுபவங்களை புறந்தள்ளி

இனம் காக்க களம் கண்டவர்களை

சாதிகளின் சாயத்தில் தோய்த்து

விழுதுகளாய் வியாபித்து நிற்கும் அடையாளங்களை

முறித்து எறியும் நம்மிடம்

கர்வமாய் அறைந்து சாற்றித்திரிய

எப்பொழுதும் கைவசமிருக்கிறது.

கல் தோன்றா

மண் தோன்றா காலத்தே

முன் தோன்றிய மூத்த குடி என்ற பெருமை மட்டும்!

 

நன்றி : திண்ணை.காம்