Sunday 17 August 2014

என் கேள்வியும், சாருவின் பதிலும்

அந்திமழை.காம் இதழில் வெளிவந்தஅறம் பொருள் இன்பம்என்ற பகுதியில் வெளியான என் கேள்வியும், சாருவின் பதிலும்

காமத்தால் மேவிய வழி நிகழ்வைச் சொல்லுதல்,  புனைவின் வழி நிகழ்வைச் சொல்லுதல், நிகழ்வை அப்படியே தேர்ந்த வார்த்தைகளில் சொல்லுதல், எந்தப் புனைவும் தேர்ந்தெடுத்தலுமின்றி அப்படியே நிகழ்வை அதன் போக்கில் பாசாங்கில்லாமல் சொல்லுதல் -  இதில் இலக்கியம் என்பதற்கான வரையறை என்ன? காரணம், இவைகள் அனைத்தும் இலக்கியத்தின் கீழ் தான் வகைபடுத்தப்பட்டு வருகின்றன. புதிதாய் இலக்கிய வாசிப்புத் தளத்திற்குள் நுழையும் என் போன்ற முதல் தலைமுறை வாசகனாய் முன்னோக்கி வருபவர்கள்  எதை அதற்கான வரையறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

மு.கோபி சரபோஜி / இராமநாதபுரம்

பதில்: கோபி, நீங்கள் வாசகன் என்று சொன்னாலும் எழுத்தாளராகத்தான் இருப்பீர்கள் என்று யூகிக்கிறேன்இலக்கியத்துக்கு வரையறை என்று எதுவும் கிடையாதுஎப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்ஏனென்றால், உத்திகள் ஒரு இலக்கியப் படைப்புக்கு மேலும் கொஞ்சம் மெருகூட்டலாமே தவிர அதுவே இலக்கியமாகி விடாதுஎப்படி ஒருவர் பயிற்சி வகுப்புகளின் மூலம் ஞானியாகி விட முடியாதோ அப்படியே உத்திகளை வெற்றி கொள்வதன் மூலம் ஒருவர் இலக்கியவாதி ஆகி விட முடியாது

என்னைப் பொறுத்தவரை, ஒரு எழுத்தாளன் என்பவன் ஞானிக்கு சமமானவன்அவன் பெற்ற ஞானமே எழுத்தாகப் பிரவாகம் கொள்கிறதுஆன்மாவின் ஒளி கண்கள் என்பார்கள்அதேபோல் சமூகத்தின் ஒளி, எழுத்தாளன்எனவே ஒருவன் எழுத்தாளனாக வேண்டுமெனில் அவன் ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும்ஆன்ம சுத்திக்கு என்ன செய்வதுவாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனம் இருந்தால் அங்கே ஆன்மா சுடர் விட்டு ஒளிரும்.

அவந்திகா காலை எட்டு மணிக்குள் கோலம் போட்டு விடுவாள்மாக்கோலம்ஒருநாள் ஏதோ காரணத்தால் எட்டு மணிக்கு மேல் ஆகி விட்டதுநான் அன்றைய தினம் நடைப் பயிற்சிக்குப் போகாமல் அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்தோட்டத்துச் செடி கொடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் அவந்திகாஅப்போது மரங்களிலிருந்து ஏகப்பட்ட அணில்களின் கிறீச் கிறீச் சத்தம் விடாமல் கேட்டது.   ஆச்சரியத்துடன் என் அறையை விட்டு வெளியே வந்தேன்.  “, குழந்தைகளுக்குப் பசிக்கிறதுஎன்று முனகிக் கொண்டே தண்ணீர்க் குழாயை அப்படியே தரையில் போட்டு விட்டு வெளியே கோலம் போடச் சென்றாள்அணில்களின் சத்தம் நின்ற பாடில்லைஅவ்வளவு கூச்சலில் எழுத முடியாமல் நான் வெளியிலேயே நின்றிருந்தேன்அவந்திகா கோலம் போட்டு முடித்ததும் பத்துப் பதினைந்து அணில்கள் வேக வேகமாய் ஓடி வந்து அவள் போட்டிருந்த அந்த அழகிய கோலத்தின் மாவைத் தின்ன ஆரம்பித்தன. வீட்டின் இன்னொரு வாசல் கோலத்தைக் காகங்கள் தின்று கொண்டிருந்தன.   

இலக்கியத்தின் அடிப்படை ஒன்றே ஒன்றுதான்அன்புஅந்த அன்பை எழுத்தில் கொண்டு வர எந்த உத்தியும் தேவையில்லைமனதில் ஈரம் வேண்டும்அவ்வளவே.


நன்றிஅந்திமழை.காம்